தீர்க்கதரிசி வில்லியம் பிரன்ஹாமின் வாழ்க்கை வரலாறு சகோதரன் பிரன்ஹாமின் வாலிப பருவம் (1933-1946) புத்தகம் 2 புத்தகம் 1-ன் சுருக்கம்: (சகோதரன் பிரன்ஹாம் ஒரு வாலிப பெண்ணை சந்திக்கிறார். அவளுடைய பெயர் அமலியா ஹோப் பிரம்பாக். அவள் பிரன்ஹாமை ஜெபர்ஸன்வில்லிலுள்ள மிஷனரி பாப்டிஸ்ட் சபைக்கு போகும்படி அழைக்கிறாள். அவர் தவறாமல் சபை ஆராதனைகளில் பங்கு கொள்கிறார். அந்த சபையின் மேய்ப்பரான டாக்டர். ராய் டேவிஸ் அவர்கள் வாலிபரான பில்லியின் (பிரன்ஹாம்) உத்தமத்தைக் கண்டு ஈர்க்கப்பட்டுகிறார். அவர் பில்லியை அநேக மாதங்களாக கவனித்து வந்த பிறகு, பில்லி ஊழியம் செய்ய வேண்டும் என்று ஆலோசனை சொல்லுகிறார். பில்லி அந்த தருணத்தை நன்றாக பயன்படுத்தி தேவனுக்கு ஊழியம் செய்கிறார்.) (1933-ம் வருடம் அதாவது சகோதரன் பிரன்ஹாமுக்கு ஏறக்குறைய 24 வயதாகும் போது அவருடைய ஜீவியத்தில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்கள் சிலவற்றை இங்கு கொடுத்துள்ளோம். இது இயற்கைக்கு மேம்பட்டவை வில்லியம் பிரன்ஹாமின் ஜீவிய சரிதை (புத்தகம் 2) - லிருந்தும் இருபதாம் நூற்றாண்டு தீர்க்கதரிசி என்ற புத்தகத்திலிருந்தும் எடுக்கப்பட்டுள்ளன. இங்கு "பில்லி” என்று குறிப்பிடுவது "தீர்க்கதரிசி வில்லியம் பிரன்ஹாமைக்” குறிக்கிறது.) வில்லியம் பிரன்ஹாம் 24 வருடங்களாக தம்முடைய சொந்த ஆவிக்குரிய வனாந்தரத்தினூடாக எந்தவித நோக்கமுமின்றி அலைந்து திரிந்தபடியால், மிகவும் பசியோடிருந்தார். ஆவிக்குரிய விதமாக, மரப்பட்டைகளையும், இலைகளையும், புல்களையும் தாம் ஜீவனோடிருக்கும்படி புசித்து வந்தார். ஆனால் இப்பொழுது, அவ ருடைய ஜீவியத்திலேயே முதல் தடவையாக மரித்துக் கொண் டிருக்கிற மனிதனுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிற பரத்தி லிருந்து இறங்கி வந்த ஜீவ அப்பமாகிய இயேசு கிறிஸ்துவைப் புசித்தார். அவருடைய ஆவிக்குரிய வலிமை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருப்பதை பில் உணர்ந்து கொண்டார். இப் பொழுது, பில்லியிடம் நம்பிக்கையும் அன்பும் இருந்தன, நித்தியத் தைக் குறித்த ஒரு நோக்கமும் அவரிடம் இருந்தது. ஒவ்வொரு கிறிஸ்தவனும் அவனுடைய ஜீவியத்தில் கர்த்தருடைய சித்தத்தை அறிய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் சர்வ வல்லமையுள்ள தேவன் தம்முடைய சிந்தைகளை வேதாகமத்தில் வரைந்து வைத்துள்ளார் என்றும் அதை அறிய வேதம் வாசித்து ஜெபிக்க வேண்டும் என்றும் பில்லியின் மேய்ப் பர் பிரசங்கிப்பதை அவர் கேட்டார். அது பில்லியைத் தொட்டது. எனவே அவர் ஆர்வமுடன் வேதம் வாசித்து, தேவனுடைய வார்த் தையைக் குறித்த அறிவைப் பெருக்கிக் கொண்டார். அவர் பத்து வருடங்களுக்கு முன்பு தம்முடைய ஏழாம் வகுப்பு படிப்பை முடித்ததிலிருந்து அவர் அநேக புஸ்தகங்களை வாசித்திருக்கவில்லை, எனவே அவருடைய வாசிக்கும் திறமை மந்தமாகத்தான் இருந்தது. வேதத்தின் பொதுவான அர்த்தங்கள் புரிந்தாலும், நேபுகாத்நேச்சார், செருபாபேல், பெனாயா போன்ற கடினமான பழைய ஏற்பாட்டு பெயர்களை அவரால் உச்சரிக்க இயலவில்லை. மேலும் கிங் ஜேம்ஸ் ஆங்கில வேதாகமத்திலுள்ள வாக்கிய அமைப்புகள் அவருக்கு பெரும் போராட்டமாக அமைந் தன. அவர் 1933-ம் வருடத்தின் தொடக்கத்தில் தம்முடைய முதலாவது செய்தியைப் பிரசங்கித்த போது, வேதாகமத்தை சத்த மாக வாசிக்க தம்முடைய நாவை அவர் நம்பவில்லை. அதற்குப் பதிலாக வேதபாகத்தை அவருக்காக வாசிக்கும்படி, மேடையில் அவருக்கு பின்பாக உட்கார்ந்து கொண்டிருக்கும் ஹோப்பையே (பிரன்ஹாமின் மனைவி) வற்புறுத்தினார். அதற்காக அவளுக்கு அவர் சைகை காட்டி தெரிவித்தார். அவருடைய பாடமானது ஒழுக்கங்கெட்ட விதத்தில் ஜீவித்த சிம்சோனிடத்தில் தேவன் கொண்டிருந்த கிருபையும் பாதுகாப்பும் என்பதாக இருந்தது. ஹோப், நியாயாதிபதிகளின் புஸ்தகத்திலிருந்து வாசிக்க, பில் அதை விவரிக்கத் தொடங்கினார். உடனே இயேசு, யோவான் 14-ம் அதிகாரத்தில் கூறினதை சபையோரிடம் வாசித்துக் காட்ட அவர் விரும்பினார். அவர் ஹோப்பிடம் தலையசைத்து சைகை காட்டினார். அவள், "உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக” என்று வாசிக்கத் தொடங்கினாள், பில் உடனே நிறுத்தி, "வேதா கமம் கூறுவது உங்களுக்குக் கேட்டதா; நீங்கள் கலங்கிப் போகக் கூடாது” என்றார். பின் மீண்டும் ஹோப்பிடம் தலையசைத்து சைகை காட்டி, தொடர்ந்து வாசிக்கச் சொன்னார், அவள், "தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்” என்று வாசித்தாள், மீண்டும் பில்லி நிறுத்தி விட்டு, “நீங்கள் அதைச் செய்வீர்களா? நீங்கள் உண்மையாகவே விசுவா சிக்கிறீர்கள்?” என்று கேட்டார். அவர் தொடர்ந்து அலங்கோலமா கவும், மேடுபள்ளமாகவும் அவருடைய முதல் பிரசங்கத்தைப் பிரசங்கித்தாலும், அவர் இருதயத்தில் இருந்த அந்த உத்தமம் அவரை நல்ல பிரசங்கம் செய்பவராக ஆக்கியது. அவருடைய பிரசங்கத்தைக் கேட்டுக் கொண்டிருந்தவர் களைக் கவனித்தார், எல்லா பிரன்ஹாம் (பிரன்ஹாமின் தாயார்) தம்முடைய மகனின் வார்த்தைகளைக் கவனமாகக் கேட்டார்கள். பில்லியின் ஜீவியத்தில் நடந்த வியக்கத்தக்க மனமாற்றமும் அவர் அற்புதமாக சுகமடைந்ததும் அவர்களுடைய ஆத்துமாவைத் தட்டி எழுப்பியது. பில்லியின் தாயாராகிய எல்லா பிரன்ஹாம் தம்மு டைய 39-ம் வயதில் இயேசு கிறிஸ்துவுக்குத் தம்முடைய ஜீவி யத்தை ஒப்புக்கொடுத்தார்கள். சந்தோஷம் நிரம்பி வழிந்தது, பில்லி தம்முடைய தாயாருக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்தார். அவருடைய தாயாருடைய மனமாற்றம் அவரை உற்சாகப் படுத்தினதால், பில்லி தம்முடைய தகப்பனாரையும் சபைக்கு வரும்படி வற்புறுத்தினார். சார்லஸ் பிரன்ஹாமோ (பில்லியின் தகப் பனார்) அதை மறுத்தார், பில்லி முழுமுயற்சியுடன் வற்புறுத்தியும் அவர் அசைந்து கொடுக்கவேயில்லை. அது பில்லியை கவலைப் பட செய்தது. ஆனாலும் இழக்கப்பட்டவர்களின் பேரிலுள்ள அக்க றையை அது எடுத்துப்போட முடியவில்லை. ஏனெனில் அவரு டைய 14-வது வயதில் அவர் இழக்கப்பட்டவர்கள் இருக்கும் ஸ்லத்திற்கு போயிருந்த போது கிடைத்த திகிலூட்டும் அனுபவ மும் அதற்குக் காரணமாயிருந்தது. இப்பொழுது, பில்லி, “அன் புள்ள தேவனே, என்னுடைய தனப்பனார் அதைப்போன்ற இடத் திற்குப் போகும்படி நீர் அனுமதிக்க வேண்டாம். தயவுகூர்ந்து அவர் உம்முடைய கிருபையை காணும்படி செய்யும், அவர் உம்மு டைய மன்னிப்பை ஏற்றுக்கொள்ளட்டும்” என்று அடிக்கடி ஜெபித்து வந்தார். ஒரு நாள் இரவு வேளையில், பெரும்பாலான அவருடைய குடும்பத்தினர் படுக்கைக்குச் சென்ற பிறகு, பில்லி முன் அறை யிலிருந்த வைக்கோல் மெத்தையின் மேல் படுத்தவாறு அவரு டைய தகப்பனாருக்காக ஜெபித்துக் கொண்டிருந்தார். அவரு டைய தகப்பனாரோ உள்ளுர் மதுக்கடை ஒன்றில் குடித்துக் கொண்டிருந்தார். பில்லி ஜெபித்த வேளையில், ஒரு சத்தம், “எழுந்திரு” என்று கூறுவது போன்ற ஒரு உணர்வைப் பெற்றார். அவர் எழுந்து வாசலுக்கு வெளியே நடந்து சென்றார். ஏனென்று அவருக்குத் தெரியவில்லை, ஆனால் அவர் ஏதோவொன்றின் பக்கமாக இழுக்கப்படுவது போன்று உணர்ந்தார். வீட்டிற்குப் பின்னால், துடைப்பம் புல் (broomsage) மட்டுமீறி வளர்ந்து கிடந்தது. அவை சிவப்பு நிறத்தில் முழங்கால் உயரம் வரை வளர்ந்து கிடந்தது. அதற்குக் குறுக்காக ஒரு நடை பாதை சென்றது. பில்லி நட்சத்திர வெளிச்சத்தில் அப்பாதையைப் பின்தொடர்ந்து போனார். அந்த மேய்ச்சல் நிலத்தின் நடுப்பகு தியை அவர் அடைந்த போது, அவர் முழங்கால்படியிட்டு, தம்மு டைய தலையை தாழ்த்தி, தம்முடைய கரங்களை மடக்கிக் கொண்டு, தம்முடைய தகப்பனாருக்காகத் தொடர்ந்து ஜெபித்துக் கொண்டிருந்தார். திடீரென்று அவர் கண்களைத் திறந்து பார்த் தார், அவருக்கு முன்னே பத்து அடி தூரத்தில் ஒரு மனிதர் நின்று கொண்டிருப்பதைக் கண்டு திடுக்கிட்டார். அவர் ஒரு வழக்கத்திற்கு மாறான மனிதராகவும், குட்டையான சிறிய தோற்றமுடையவராகவும், தம்முடைய தோள்கள் வரை மயிரைக் கொண்டவராகவும், வெண் வஸ்திரம் தரித்தவராகவும், நட்சத்திர வெளிச்சத்தில் தெளிவாக பார்க்கும்படியாக நின்று கொண்டிருந் தார். அந்த மனிதர் பில்லியின் பக்கவாட்டில் கிழக்கு திசையை நோக்கியபடி நின்று கொண்டிருந்தார். அவர் ஒரு அமைதியான மனிதராக இருந்தார். அவருடைய கரங்களை மடக்கிக் கொண் டும், அவருடைய ஒரு காலை மற்ற காலுக்கு சற்று முன்னால் வைத்துக் கொண்டிருந்தார். பில்லி அந்தக் கால்களை இரண் டாவது முறையாகப் பார்த்தார். நம்ப முடியாத அளவுக்கு அந்த கால்கள் தரையைத் தொடாமல் தரைக்கு மேலே அந்தரத்தில் நின்றன. அவர் தம்முடைய சொந்த கைமுட்டியைக் போதுமான வலி உண்டாகுமளவுக்கு கடித்துக் கொண்டே, “இப்பொழுது, ஒரு நிமிடம் காத்திரு” என்று பில்லி நினைத்தார். “நான் தூங்கிக் கொண்டிருக்கவில்லை. இல்லை, நான் அங்கே உள்ளே அப்பா வுக்காக ஜெபித்துக் கொண்டிருந்தேன், ஏதோவொன்று இங்கே வெளியே வரும்படி சொன்னது... இங்கே இந்த மனிதர் நிற்கி றார்." அது மிகவும் தத்ரூபமாக காணப்பட்டது. உயரமான புற்களில் வீசிய தென்றல் காற்றின் காரணமாக இந்த மனித ருடைய வெண் வஸ்திரம் காற்றில் அசைந்தது. பில் ஒரு துடைப் பக் குச்சியை ஒடித்து, பல்குத்தியைப் போன்று தம்முடைய வாயில் போட்டு மென்று கொண்டார். அவர், “அது கர்த்தராகிய இயேசுவைப் போன்று காணப்படுகிறதே. அது அவர் தானா என்று வியப்பாக உள்ளதே” என்று எண்ணினார். அவர் சிறிது அப்பால் நழுவிச் சென்று பார்த்தார். அப் போது அவரால் அம்மனிதருடைய முகத்தை சற்று அதிகமாக காண முடிந்தது. அவர் தம்முடைய தொண்டையைச் சரிசெய்ய, “ஊ-உம்” என்று கனைத்துப் பார்த்தார். அந்த மனிதர் அசைய வேயில்லை. பில்லி, "நான் அவரை கூப்பிடுவேன் என்று நம்புகி றேன்” என்று நினைத்து, “இயேசுவே?” என்று சத்தமாக அழைத் தார். அந்த மனிதர் திரும்பி, அவரை நோக்கி கரங்களை நீட்டினார். பில்லிக்கு ஞாபகம் உள்ள கடைசி காரியம் அதுதான். அவர் சுயநினைவை இழந்து, விழுந்தார், ஆனால் அந்த முகத்தை அவருடைய நினைவை விட்டு எடுத்துப் போடவே முடியவில்லை. அந்த முகத்தை வரைய எந்த ஓவியனாலும் முடியாது. அது அதிகார தோரணையுடன் காணப்பட்டது. அவர் பேசுவாரானால், உலகம் முடிவுக்கு வந்து விடும் போல் காணப்பட்டது, ஆனால் அவருடைய கண்களில் இரக்கமும் தயவும் அன்பும் சுடர்வீசின. பொழுது புலர்ந்த போது, பில் தம்முடைய சுயநினைவிற்கு வந்தார். அவர் அப்போதும் துடைப்பப்புல் வயலிலேயே இருந்தார், குளிர்ந்த இரவுநேர காற்றின் காரணமாக நடுங்கிக்கொண்டிருந் தார். அவருடைய கண்ணீரால் பைஜாமா ஆடை ஈரமாகியிருந் தது. அவர் வீட்டிற்குச் சென்று உடையுடுத்தி விட்டு, அதைப்பற்றி அவருடைய மேய்ப்பருடைய அபிப்ராயத்தைக் கேட்கும்படி உற்சா கத்தோடு கிளம்பி விட்டார். டாக்டர் டேவிஸ் இந்தச் சம்பவத்தைக் குறித்து உற்சாகமின் றியே காணப்பட்டார். "பில்லி, அது உன்னை பைத்தியம் பிடித்தவ னாக ஆக்கிவிடும். அது பிசாசு. அதைப்போன்ற எதனுடனும் நீ உன்னை முட்டாளாக்கிக் கொள்ள வேண்டாம்.” அந்த அதைரியப்படுத்தும் வார்த்தைகள் பில்லி அதிக மரி யாதை செலுத்தின ஒரு மனிதருடைய வாயிலிருந்து வருகின் றன. அவர் பயத்தோடும் குழப்பத்தோடும் போதகர் வீட்டை விட்டுத் (parsonage) திரும்பினார். இரண்டாவது நபருடைய அபிப்பிராயம் அவருக்குத் தேவைப்பட்டது. எனவே அடுத்ததாக சங்கை மெக்கின்னி (McKinney) என்ற தம்முடைய பழைய நண்பரை பில்லி சந்தித்து, அந்த மூத்த ஊழியக்காரரிடம் சம்ப வித்த யாவற்றையும் கூறினார். “இப்பொழுது, சகோதரன் மெக் கின்னி, நீர் அதைக் குறித்து என்ன நினைக்கிறீர்?” சங்கை மெக்கின்னி யோசித்தவாறு தம்முடைய கன்னத்தைத் தடவிக்கொண்டார். "நல்லது, பில்லி, நான் உமக்குக் கூறுகிறேன் நீர் உம்முடைய ஜீவியத்தை சுத்தமாக வைத்துக்கொண்டு, இங்கே வேதாகமத்தில் என்ன இருக்கிறதோ அதையே பிரசங் கித்தால், தேவனுடைய கிருபையும் மற்றவைகளும் உமக்கு இருந்து நீர் நன்றாக இருப்பீர் என்று நம்புகிறேன். நான் நீரா யிருந்தால், ஏதோவொரு நம்ப இயலாத காரியத்தின் பிறகே போகவே மாட்டேன்." “ஐயா, ஏதோவொரு நம்ப முடியாத காரியத்தின் பிறகே நான் போவதாக நான் கருதவில்லை, இது என்னவென்று கண்டுபிடிக் கவே முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்." சங்கை மெக்கின்னி தலையாட்டினார். “பில்லி, பல வருடங்களுக்கு முன்பு அவர்கள் அந்தவிதமான அனுபவங் களை சபையில் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். ஆனால் அப்போஸ் தலர்கள் மரித்துப்போன உடனே அந்தக் காரியங்களும் அவர்க ளோடு முடிவுக்கு வந்து விட்டன. இப்பொழுது அந்தவிதமான அதிசய சம்பவம் நடக்க வேண்டுமானால் அது பிசாசுகள் மற்றும் ஆவிகள் சம்பந்தமானதுமாயிருக்க வேண்டும்.” “ஓ, சகோதரன் மெக்கின்னி, நீர் அப்படி நினைக்கிறீரா?” “ஆம், நான் அவ்வாறுதான் கருதுகிறேன்.” பில்லி அந்த எண்ணத்தால் பயந்து நடுங்கினார். தேவனே, என்மேல் இரக்கமாயிரும்! சகோதரன் மெக்கின்னி, அது மீண்டும் ஒருபோதும் சம்பவிக்கும்படி தேவன் அனுமதிக் காதபடிக்கு என்னுடன் சேர்ந்து ஜெபிப்பீர்களா. நான் அவரை நேசிக்கிறேன் என்பது உமக்குத் தெரியும், இந்தக் காரியங்களில் நான் தவறாயிருக்க விரும்பவில்லை." “சரி, சகோதரன் பில்லி, நான் ஜெபிக்கிறேன்.” போதகருடைய வீட்டின் தரையிலேயே அவர்கள் இருவரும் முழங்கால்படியிட்டனர். “பரலோகப் பிதாவே, இந்த வாலிப கிறிஸ் தவருடைய ஜீவியத்தைத் தொந்தரவு செய்யும் இந்த பிசாசு சம்பந்தமான சம்பவங்களை அவரை விட்டு நீக்கியருளும்” என்று சங்கை மெக்கின்னி ஜெபித்தார். பில்லி அதை ஒப்புக்கொண்டு, “ஆம், பரலோகப் பிதாவே, இந்த காரியங்கள் மீண்டும் எனக்குச் சம்பவிக்க தயவுசெய்து ஒருபோதும் அனுமதிக்காதிரும்” என்று ஜெபித்தார். ஆனால் அவைகள் தொடர்ந்து சம்பவித்துக் கொண்டுதான் இருந்தன. அவர் ஏதோவொன்றைக் கண்டிருந்தார், அது என்ன வென்று அவர் அறியாதிருந்தாலும் கூட அவரால் அதை மறக் கவோ, அலட்சியப்படுத்தவோ முடியவில்லை. அவருடைய மேய்ப்பரின் வார்த்தைகள் மீண்டும் அவருடைய நினைவுக்கு வந்தன: “உன்னுடைய ஜீவியத்திற்கான தேவ சித் தத்தை நீ அறிய விரும்பினால், வேதாகமத்தை வாசித்து ஜெபம் பண்ணு.” பில் ஒரு பழைய ஓக் மரத்தின் கீழே ஒரு இடத்தைக் கண்டுபிடித்து, தன்னுடைய பிரச்சனையைக் குறித்து இரவில் நீண்ட நேரம் ஜெபித்தார். நடுஇரவு கழிந்த பிறகு தூசியைத் தட்டிவிட்டு வீட்டிற்குப் போனார். அவருடைய தாயார் அவரை உள்ளே வரும்படிக் கேட்டுக்கொண்டார், அவரை அழைத்து அவ ருடைய சகோதரி வியாதியாயிருப்பதாக அவரிடம் கூறினார். பில் தம்முடைய 3 வயது சகோதரியான டிலோரஸ் உறங்கிக் கொண் டிருந்த அறையின் பக்கத்தில் முழங்கால்படியிட்டு அவளுக்காக ஜெபித்துவிட்டு, தம்முடைய அறைக்குப் போய்விட்டார். அவர் கதவை அடைத்தவுடனே, இரண்டு மூடப்படாத மின்சார கம்பிகள் உரசும்போது (arcing) உண்டாகும் சத்தத்தைப்போல தொடர்ந்து சட சட என்ற சத்தம் வந்து கொண்டிருந்தது. எனவே வீட்டில் மின்சார ஓட்டத்தில் பழுது ஏற்பட்டிருக்க வேண்டும் என்று அவர் எண்ணி, சுவரில் பதிக்கப்பட்டிருந்த மின்னிணைப்புப் பெட்டியை (wall sockets) அவருடைய கண்கள் நுட்பமாக சோதித்துப்பார்த் தது. அப்போது மஞ்சள் கலந்த பச்சை நிறத்திலான ஒரு வினோத ஒளி அறை முழுவதையும் நிரப்பியிருந்தது. உடனடியாக அது அறையை விட்டு முற்றிலுமாக மறைந்து போய்விட்டது. அப்பொழுது அவர் ஆகாயத்தில் நின்று கொண்டிருப்பது போல் அவருக்குத் தோன்றியது. அவர் மிகவும் பயந்து போய், அவர் இறந்து கொண்டிருப்பதாக எண்ணினார். அதன்பிறகு அந்த ஒளி அவரைச் சுற்றிலும் இருப்பதை அவர் கவனித்தார். அவர் மேலே நோக்கிய போது, ஒரு பெரிய நட்சத் திரம் இருப்பதையும் அதிலிருந்து ஒளி புறப்பட்டு வருவதையும் கண்டார். அது அவரை நெருங்கி வந்து கொண்டிருந்தது. அதன்பிறகு அவரால் மூச்சு விடவும் பேசவும் முடியாமல் போனது போல் தோன்றினது. அடுத்தபடியாக அந்த நட்சத்திரம் அவரு டைய மார்பில் வந்து அமர்ந்தது. அந்த நேரத்தில் காட்சியானது மாறி, அவர் பசும்புல் வளர்ந் திருந்த ஒரு மலையின் மேல் இருந்தது போல் தோன்றினது. அவருக்கு முன்பாக நான்கு முனை கொண்ட பழங்காலத்து மிட்டாய் ஜாடி இருந்தது. அந்த ஜாடிக்குள் ஒரு பெரிய பூச்சி மாட்டிக்கொண்டு, வெளியே வர தத்தளித்துக் கொண்டிருந்தது. அவர் வலது பக்கம் திரும்பினார், அப்பொழுது அந்த வல்லமை யுள்ள தூதன் அங்கு நின்று கொண்டு, அவரையே உற்று நோக்கிக் கொண்டிருந்தான். தூதன் அவரிடம், "நான் உனக்குக் காண்பிக்கப் போவதைப்பார்" என்றான். அப்பொழுது ஒரு கை கல்லெறிந்து அந்த ஜாடியை உடைப்பதை சகோ.பிரன்ஹாம் கண்டார். அதற்குள் இருந்த பூச்சி வெளியே பறந்து செல்ல முயன்றது. ஆனால் அதனால் இயலவில்லை. அதன் உடல் அதன் குட்டையான செட்டைகளுக்குள் மிகவும் கனமாக இருந் தது. அந்தப் பூச்சியிலிருந்து ஒரு கூட்டம் பூச்சிகள் தோன்றின. அவைகளில் ஒன்று சகோ.பிரன்ஹாமின் காதுக்குள் பறந்து சென்றது. தூதன் அவரை நோக்கி, "நீ கண்ட இந்த பூச்சிகள் குறி சொல்லும் அசுத்த ஆவிகளுக்கு எடுத்துக்காட்டாயுள்ளன” என்றான். அதன்பிறகு அவன், "ஜாக்கிரதையாயிரு” என்று எச்சரித் தான். இந்த தரிசனம் மூன்று முறை தோன்றினது. தரிசனம் முடிந்தவுடன் சகோ. பிரன்ஹாம் தன் சுயநினைவை அடைந்தார். அவரால் அன்றிரவு உறங்கவே முடியவில்லை. அடுத்த நாள் அவர் மிகவும் ஜாக்கிரதையாயிருந்தார். அவர் ஒவ்வொரு அசை வையும் கவனித்து, எந்த நேரத்திலும் ஏதாவதொன்று நடக்கு மென்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். இந்தக் காரியம் முழு வதுமே அவருக்குப் புதிதாக இருந்தது. ஏனெனில் இதுவே தரிசனத்தின் மூலம் அவருக்குக் கிடைக்கப்பெற்ற முதலாம் எச்சரிக்கை. அன்று நடுப்பகலில், பகல் உணவு வாங்குவதற்கென அவர் ஒரு சிறு பல சரக்கு அங்காடிக்குச் சென்றார். அந்த அங்காடி யில் கிறிஸ்தவர் ஒருவர் வேலை செய்து வந்தார். சகோதரன் பிரன்ஹாம், அவரை சற்று முன்புதான் கிறிஸ்துவினிடம் நடத்தி னார். அதன் பிறகு அவர் சகோ. பிரன்ஹாமின் சுவிசேஷ பணி யில் மிகவும் உதவியாக இருந்து வந்தார். அந்த அங்காடியில் சகோ.பிரன்ஹாம் அவரிடம் இந்த தரிசனத்தை எடுத்துரைத்துக் கொண்டிருந்த போது, ஒரு ஸ்திரீ அந்த அங்காடியின் முன்வாச லுக்குள் நுழைந்தாள். அப்பொழுது சகோ.பிரன்ஹாமுக்கு ஒரு விசித்திரமான உணர்வு தோன்றினது. ஒரு வினோதமான ஆவி உள்ளே வந்துள் ளதை அவர் அறிந்து கொண்டார். அதை அவர் தன் நண்பர் சகோ. ஜார்ஜ் டீ ஆர்க்குக்கு அறிவித்தார். அந்த ஸ்திரீ சகோ. டீ ஆர்க்கின் சகோதரனான எட் என்பவரிடம் வந்து, “பிரன்ஹாம் என்னும் பெயர் கொண்ட ஒருவரை நான் தேடிக்கொண்டிருக்கி றேன். அவர் தேவனுடைய மனிதன் என்று என்னிடம் கூறப்பட் டது” என்றாள். அப்பொழுது எட், சகோ. பிரன்ஹாமைக் கூப்பிட் டார். அவர் அவளிடம் வந்த போது, அவள், "நீர் தான் தேவ னுடைய தீர்க்கதரிசி வில்லியம் பிரன்ஹாம் என்பவரா?” என்று கேட்டாள். அவர், "நான் வில்லியம் பிரன்ஹாம்” என்று பதில ளித்தார். அவள் தொடர்ந்து, "நீர் தான் மருத்துவமனையில் திரு. வில்லியம் மேர்ரில் என்பவரின் மேல் அந்த அற்புதத்தை விளை வித்து, 17 ஆண்டுகளாக ஊனமுற்றிருந்த மேரி டெர் ஓஹா னியன் என்பவளை குணமாக்கினவரா?” என்று கேட்டாள். அவர், “நான் வில்லியம் பிரன்ஹாம், இயேசு கிறிஸ்து அவளை குணமாக்கினார்” என்று பதிலளித்தார். அவள், “நான் சில நிலச் சொத்துக்களை இழந்து விட்டேன். அவை எங்குள்ளன என்பதை எனக்குக் காண்பித்துத் தர வேண்டும் என்றாள். சகோ. பிரன்ஹாமுக்கு அவள் நிலச்சொத்துக்களைக் குறித்து கூறினது புரியவில்லை, ஆனால் சாத்தான் தான் இந்தப் பணியில் அவளை அனுப்பியிருக்கிறான் என்பதை அறிந்து கொண்டார். அவர் அவளிடம், “அம்மணி, நீ தவறான ஆளிடம் வந்திருக் கிறாய். நீ அசுத்த ஆவிகள் பேசுவதற்கு கருவியாக உபயோ கிக்கும் ஒருவரை நாட வேண்டும்” என்றார். அவள், “நீர் அப்படிப் பட்ட ஒரு கருவி இல்லையா?" என்று கேட்டாள். அவர், “இல்லை, அந்த கருவிகள் பிசாசினால் உபயோகிக்கப்படுபவர் கள், நானோ ஒரு கிறிஸ்தவன், நான் தேவனுடைய ஆவியைக் கொண்டிருக்கிறேன்" என்றார். அதைக் கேட்ட போது, அவள் அவரை முறைத்துப் பார்த்தாள். அவர் அவளிடம் இன்னும் பேசு வதற்கு முன்பு தேவ ஆவியானவர், அவளே ஒரு பிசாசின் கருவி என்றும், அவர் தரிசனத்தில் அவருடைய காதுக்குள் வருவது போல் கண்ட பூச்சி இதுதான் என்றும் உரைப்பதை அவர் கேட்டார். அப்பொழுது அவர் அவளிடம், “நேற்றிரவு ஒரு தரிசனத்தில் கர்த்தர் தமது தூதனை என்னிடம் அனுப்பி, உன்னுடைய வர வைக் குறித்து அறிவித்து, நான் ஜாக்கிரதையாயிருக்க வேண் டும் என்று என்னை எச்சரித்தார். அவருடைய வழிநடத்தும் கரத்துக்காக நான் கர்த்தருக்கு நன்றியுள்ளவனாயிருக்கிறேன். நீ செய்து கொண்டிருக்கும் பணி பிசாசினால் உண்டானது, நீ தேவனுடைய ஆவியை துக்கப்படுத்தவே வந்திருக்கிறாய்” என் றார். அவளுக்கு இருதயத்தில் வலி ஏற்பட்டு அவளுக்கு மருந்து வேண்டும் என்று கேட்டாள். அவர், “அம்மணி, இக்காரியங்க ளைச் செய்வதை விட்டு விடு, அப்பொழுது உன் இருதய வலி சரியாகிவிடும்” என்றார். அவள் அங்காடியை விட்டு சிறிது தூரம் நடந்து சென்றவுடனே, மாரடைப்பு ஏற்பட்டு நடைபாதையில் உயிர்நீத்தாள். இவ்வாறு சாத்தான் அவருக்கு வைத்திருந்த கண்ணியி லிருந்து தேவன் அவரை விடுவித்துப் பாதுகாத்தார். வில்லியம் பிரன்ஹாம் தம்முடைய புது ஊழியத்தை தீவிரமாய் செய்தார். அவருடைய வாக்குறுதியை உண்மையாக காத்துக் கொள்ள அவர் ஒவ்வொரு தருணத்தையும் பயன்படுத்தி சுவிசே ஷத்தைப் பிரசங்கம் பண்ணினார். அன்போடு கூட அவருடைய விசுவாசத்தையும் இயேசுவின் நன்மைகளையும் குறித்து தம்மு டைய பழைய நண்பர்களோடும், அவருக்கு அறிமுகமானவர்களோ டும், அந்நியர்களோடும் பகிர்ந்து கொண்டார். அவர் முதலாவது கர்ததரிடம் வழிநடத்திய ஜனங்களில் ஒருவர் யாரெனில் திரு. ஷார்ட் தான். அவர் துணை மாவட்ட மணியக்காரராக (the deputy sheriff) இருந்தார், அவர் தான் பில்லியின் வேட்டை நாயான பிரிட்ஸை விஷம் வைத்துக் கொன்று போட்டவர். மற்ற அனேகரும் கூட பின்பற்றினார்கள். பில்லி தொடர்ந்து இயேசு வைக் குறித்து சாட்சி பகர்ந்து வந்தார். பேருந்து நிறுத்தங்கள், மோட்டார் வண்டி பழுது பார்க்கும் இடங்கள், தெரு மூலைகள், நகர பூங்காக்கள் போன்ற வழக்கத்திற்கு மாறான இடங்களிலும் கூட சாட்சி கூற அவர் பயப்படவேயில்லை. இதன் முடிவாக அவருடைய விசுவாசமானது தொடர்ந்து சவால் விட்டுக்கொண் டிருந்தது. ஒரு சனிக்கிழமையில் பில் ஒரு பூங்காவில் கொஞ்சம் ஜனங்களிடம் பிரசங்கித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த பூங்காவின் அடுத்ததாக வசிக்கும் ஒரு மனிதன் ஒரு கோணிப் பையில் மளிகை சமான்களை நிறைத்து தன்னுடைய தோள்களில் வைத்து சுமந்து நடந்து வந்து கொண்டிருந்தான். பில்லிக்கு அவனைத் தெரியும். ஒரு சமயம் இம்மனிதன் ரோமன் கத்தோலிக்கப் பாதிரியாராகும் படியாக படித்திருந்தான், ஆனால் அவ னுக்கு மதமானது புளிப்பாகப் போய்விட்டது. இப்போது அவன் ஒரு நாத்திகனாயிருந்தான். அம்மனிதன் ஒரு நிமிடம் அவர் பேசுவதைக் கவனிக்கும்படி நின்றான், அவன் ஒரு பெரிய புகையிலையை மடித்து அதை வாயில் போட்டு சப்பிக் கொண்டிருந்தான். கடைசியாக அவன், "பிரசங்கியாரே, நீர் வேதாகமம் ஏதோ நல்லது போன்று அதைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறீர். வேதாகமம் எப்போதும் எழுதப்பட்ட புஸ்தகங் களிலேயே கீழ்த்தரமான ஒரு புஸ்தகம். அதை பொதுவான புஸ்தகங்கள் மத்தியில் கூட அனுமதிக்கக் கூடாது” என்றான். பில்லி, “நல்லது, இது ஒரு சுதந்திரமான தேசம். நீங்கள் உங்களுடைய சொந்த கருத்தைக் கொண்டிருக்க உங்களுக்கு உரிமையுண்டு” என்றார். முன்னர் பாதிரியாராயிருந்த அவன் பழுப்பு நிறமான புகை யிலை சாறை துப்பினான். அது பில்லியின் காலில் படாமல் சற்றே தப்பிற்று. "பிரசங்கியாரே, தேவன் ஒருவர் உண்டென்று நீர் உண்மையாகவே விசுவாசிக்கிறீரா?” “ஆம், ஐயா. நான் விசுவாசிக்கிறேன்.” "இந்த இயேசு என்ற நபர் ஒரு மனிதனாய் வந்த தேவன் என்று நீர் விசுவாசிக்கிறீரா?” "ஆம், ஐயா. இயேசு கிறிஸ்து மனிதராயிருந்தார், அவர் தேவனாகவும் கூட இருந்தார் என்று விசுவாசிக்கிறேன்.” “அவர் மனித சரீரத்தில் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந் தார் என்று விசுவாசிக்கிறீரா?” "ஆம், ஐயா. நான் விசுவாசிக்கிறேன்." அந்த மனிதன் மற்றொரு துண்டு புகையிலையை எடுத்து வாயில்போட்டு சப்பினார். “மனிதனாய் வந்த அப்படிப்பட்ட ஒரு காரியமே இல்லையென்று நான் உமக்கு நிரூபிக்கக் கூடுமானால், நீர் அதை ஏற்றுக்கொள்வீரா?” “ஆம், ஐயா, நான் அதை ஏற்றுக்கொள்வேன்.” அம்மனிதன் தன் உதடுகளால் தந்திரமான ஒரு சிரிப்பு சிரித்தான். “சரி, பிரசங்கியாரே, மனித சரீரத்தில் எத்தனை புலன்கள் உள்ளன என்று எனக்குக் கூறுங்கள்?” "எத்தனை புலன்கள் உள்ளன என்று உமக்குத் தெரியுமே.' "ஆம், ஆனால் அப்புலன்களின் பெயர்களைச் விரும்புகிறேன்” சொல்ல பில்லி கலங்கிப் போய், "பார்த்தல், ருசித்தல், முகர்தல், உணருதல், கேட்டல்” என்றார். “சரி, நீர் சொல்லுகிறபடி, இயேசு ஒரு மனித தேவனாக இருந்தால், இந்த ஐந்து புலன்களில் ஒன்று அவரை வெளிப் படையாக அறிவிக்க வேண்டுமே. அது சரியா?” சுற்றிலுமிருந்த கூட்டம் தங்களையே மறந்து இதைக் கவனித்துக் கொண்டிருந்தனர். பில் பயந்த நிலையில் கவனமாக பதிலளித்துக் கொண்டிருந்தார். “போதுமான அளவு நியாயமான தாக ஒலிக்கிறதே. ஏன்?” "நீர் எப்பொழுதாவது உம்முடைய தேவனைக் கண்டிருக்கிறீரா?' "நல்லது, ஆம். சமீபத்தில் ஒரு இரவில் நான்...” “அப்படியானால் நானும் அவரைக் காணட்டும்” என்று அம்மனிதன் சுட்டிக் குறிப்பிட்டான். “நான் விசுவாசத்தைக் குறித் துப் பேசிக் கொண்டிருக்கவில்லை. பார்வையாகிய என்னுடைய புலன் உம்மைப் போன்றே உள்ளது." பில், “நான் அவரை ஒரு தரிசனத்தின் மூலம் கண்டேன்” என்றார். “அப்படியானால் நானும் அத்தரிசனத்தைப் பார்க்கட்டும்.” “என்னால் முடியாது. தேவன் மாத்திரமே அதைக் காண்பிக்க முடியும்." "உம்முடைய ஐந்து புலன்களில் எதைக்கொண்டும் நீர் ஒரு போதும் அவரோடு தொடர்பு கொள்ளவில்லை என்பது தான் சத்தியம்.” "நான் அவரை உணருகிறேன்.” "நல்லது, நீர் அவரை உணருவீரானால், நானும் அவரை உணரட்டும். என்னுடைய உணரும் புலனானது உம்முடையதைப் போன்றே நன்றாக உள்ளது. இயேசுவை இங்கே கொண்டு வாரும், அப்படியானால் நான் அவரை உணர முடியும், பிறகு அவரை நான் விசுவாசிப்பேன்.” பில்லி கலக்கமடைந்து, "நான் அவரை என்னுடைய இருதயத் தில் உணருகிறேன்" என்றார். அம்மனிதர் அவரை எதிர்த்து, “அப்படியானால் நான் அவரை என்னுடைய இருதயத்தில் உணரட்டும்” என்றான். "நீர் விசுவாசிப்பீரானால்...” “இப்பொழுது, உம்முடைய மனோதத்துவம் அல்ல. நான் சத்தி யத்தை அறிய விரும்புகிறேன்." அந்த மனிதன் மற்றொரு புகையிலை சாறை பில்லியின் காலில் துப்பினான். பில்லி, "ஐயா, என்னுடைய காலின் மேல் தயவு செய்து துப்பாதீர்கள்” என்றார். தேவனை அறியாத அம்மனிதன் கெட்ட எண்ணத்தோடு அவரை நோக்கிப் பார்த்தான். "நல்லது, பிரசங்கியாரே, நீர் முழுவதுமாக கட்டப்பட்டு விட்டீர், இல்லையா? நீர் ஒருபோதும் அவரைக் காணவோ, உணரவோ, ருசிக்கவோ, முகரவோ, அல் லது கேட்கவோ இல்லை. எனவே, அந்த ஐந்து புலன்கள் அவரை வெளிப்படுத்தாமல் போனால், தேவன் என்ற அப்படிப்பட்ட ஒரு காரியமே கிடையாது, உம்முடைய முட்டாள்தனத்தைக் கொண்டு இந்த ஜனத்தை வஞ்சிப்பதை நீர் நிறுத்த வேண்டும்.” அந்த மனிதனிடம் எளிதில் வளைந்து கொடுக்க முடியாத, பிடிவாதமான விவாதம் இருந்தது. தேவன் ஞானத்தைக் கொடுக்க வேண்டுமென்று பில்லி தம்முடைய இருதயத்தில் ஜெபித்துக் கொண்டிருந்தார். "ஐயா, உம்மிடம் சில நல்ல கருத் துக்கள் உள்ளன என்று நம்புகிறேன்." அந்த மனிதன் ஏளனமாக சிரித்தான். "நீர் உம்முடைய சுயநினைவிற்கு வரத் தொடங்கியிருக்கிறீர், இல்லையா?” “ஒருவேளை இருக்கலாம்” என்று பில்லி சொன்னார். "நீர் உண்மையிலேயே ஒரு புத்திசாலித்தனமான மனிதர். உமக்கு நல்ல மனது உள்ளது.” அந்த நபர் மீண்டும் துப்பி விட்டு, மகிழ்ச்சியோடு, "நிச்ச யமாக, எனக்கு ஒரு நல்ல மனதுள்ளது. என்னுடைய தாயார் எந்த முட்டாள்களையும் வளர்த்து விடவில்லை” என்றான். “சற்று ஒரு நிமிடம். உமக்கு ஒரு மனதுள்ளது என்று நீர் கூறினீரா?' “நல்லது, நிச்சயமாக, நான் ஒரு மனதைப் பெற்றுள்ளேன். அது எல்லாருக்கும் இல்லையா?” ‘அது மனித சிந்தை தானா" என்று பில்லி கேட்டார். அந்த மனிதன் குழப்பத்தோடு நோக்கிப் பார்த்தான். “உனக்கு என்ன ஆனது, மகனே? நீ உன்னையே இழந்திருக்க வேண்டும். நிச்சயமாக அது ஒரு மனித சிந்தை தான்." பில்லி, “அது ஒரு மனித சிந்தையாயிருந்தால், மனித புலன் களில் ஒன்று அதை வெளிப்படுத்தியிருக்க வேண்டும். அது அவ்வாறு இல்லையா?" “நல்லது, நான் அப்படித்தான் என்று ஊகிக்கிறேன்...” "நீர் உம்முடைய மனதை எப்பொழுதாவது கண்டிருக்கிறீரா?' தீர்க்கதரிசி வில்லியம் பிரன்ஹாமின் வாழ்க்கை வரலாறு இப்பொழுது அது அந்த நாத்தீகனை நடுக்கம் கொள்ளச் செய்தது. “நல்லது, ஊ, மருத்துவர்களால் முடியும்..." "இப்பொழுது, அது மூளையல்ல” என்று பில்லி விளக்கினார், "அது மனது. மூளைக்கும் மனதுக்கும் இடையே வித்தியாசம் உள்ளது. மூளை என்பது மண்டையோட்டிற்கு கீழேயுள்ள ஒரு பாகம். நீர் நோக்கிப் பார்ப்பீரானால், அதைக் காண முடியும்; மனது என்பது மூளை சிந்திக்கும் எண்ணங்களாகும். நீர் ஒருபோதும் உம்முடைய மனதைப் பார்த்ததே கிடையாது, அப்படித் தானே?” “இல்லை, நான் பார்த்ததில்லை என்று ஊகிக்கிறேன்.” "நீர் எப்பொழுதாவது உம்முடைய மனதை நுகர்ந்து பார்த்த துண்டா? அல்லது அதை உணர்ந்ததுண்டா? அல்லது அதை ருசித்ததுண்டா? அல்லது அதைக் கேட்டதுண்டா? இல்லை, நீர் ஒருபோதும் அப்படிச் செய்யவில்லை, அப்படித்தானே? எனவே உம்முடைய கூற்றின்படி உமக்கு எந்த மனதும் கிடையாது.” "எனக்கு ஒரு மனது உண்டு என்பதை நான் அறிவேன்” என்று அம்மனிதன் கோபமாகக் கூறினான். "நானும் கூட தேவன் உண்டு என்பதை அறிவேன்” என்று பில்லி சொன்னார், அவர் தன்னுடைய கருத்தை நன்றாக விளக்கிச் சொன்னதைக் குறித்து திருப்தியடைந்தார். அதன்பிறகு அவர் திறமையோடு அதை முடிக்க வேண்டும் என்று நினைத் தார். அதைப் பார்த்துக் கொண்டிருந்த கூட்டத்தில் ஒரு வாலிப பையன் நின்று கொண்டிருந்தான். அவனிடம் மேல்சட்டைப் பகுதி யில் இருக்கும் பின் மடிப்புப் பகுதியில் சொருகி வைத்திருந்த ரோஜா மலர் இருந்தது. பில் அந்த பின்னைக் கேட்டு வாங்கி, “இப்பொழுது, நீர் என்னுடைய கருத்தைப் புரிந்து கொண்டீரா?' என்று கேட்டார். அவர் நாத்தீகனுடைய கரத்தில் தட்டினார். “ஏய்!” “நீர் அதை உணர்ந்து கொண்டீரா?” என்று பில்லி கேட்டார். “நிச்சயமாக,” அவன் விரல்களால் சுடக்கொலியிட்டு, கரத்தை பிசைந்து கொண்டே, முகத்தைச் சுளித்தான். பில்லி அமைதியாக சிரித்தார். “வினோதமாயுள்ளது, என்னால் ஒரு காரியத்தையும் உணர முடியவில்லை.” சூழ்ந்திருந்த ஜனங்களும் கூட அவனைப்பார்த்து நகைத்தனர். "நான் இந்தப் பின்னைக் கொண்டு உம்மைத் தொடுவே னானால், நீர் அதை நன்றாக உணருவீர்." இப்பொழுது பில்லி தம்முடைய எதிராளியைப் பிடித்துக் கொண்டார், அவன் அங்கு தான் வரவேண்டுமென்று அவர் விரும்பினார். “அதுதான் சரியாக என் கருத்து. நான் ஏற்றுக் கொண்ட அதே கிறிஸ்துவை நீ ஏற்றுக்கொள்வாயானால், நான் அவரை உணருகிறவிதமாக நீயும் அவரை உணருவாய்.” நாத்தீகன் கால்களைத் தரையில் உதைத்து, கோபத்துடன் அதை ஏற்றுக்கொள்ளாமல் போய் விட்டான். பில்லிக்கு அது ஆச்சரியமாயிருக்கவில்லை. அவர் ஒரு கிறிஸ்தவராக மாறி ஒரு சில மாதங்கள் மாத்திரமே ஆகியிருந்தும், ஒரு நல்ல விவாதத் தைக் கொண்டு ஒரு நபருடைய மனதை அவரால் மாற்ற முடி யாது என்பதை உணர்ந்து கொள்வதற்கு அவர் போதுமான ஜனங்களுக்கு சாட்சியாக இருந்தார். விசுவாசம் என்பது தேவனிடமிருந்து வருகிற ஒரு வெளிப்பாடாயுள்ளது. *****